
அக்கினிப் பறவைகள் அமைப்பினால், 12.11.17 அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில், „எழுவோம்“ எனப் பெயரிடப்பட்ட குறுவட்டு வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த ஈழத் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றி, நிகழ்வினைச் சிறப்பித்துள்ளனர். இக்குறுவட்டு வெளியீடு, அக்கினிப் பறவைகள் அமைப்பின் வெளியீட்டுப் பிரிவாகிய புரட்சி Soundன் ஓர் ஆரம்ப முயற்சியாக அமைந்து, நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, யேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சொல்லிசைக் கலைஞர்களான TMDC Recordsம், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஆத்மா நடனக் குழுவும், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடன், புலத்தில் பிறந்து, வளர்ந்த ஈழத்துக் கலைஞர்களான; அஜானா, ரம்மியா, மிருதுளா, விபூர்ணன் ஆகியோர் ஈழத்துப் பாடல்களைப் பாடியதோடு, தமிழீழத்துக் கலைஞரான சந்திரமோகன் அவர்களும், பாடல் ஒன்றைப் பாடி, நிகழ்வினைச் சிறப்பித்தார். அத்துடன், சுவிஸ் நாட்டினைச் சேர்ந்த முரளி அவர்களும், அவதாரம் நடன ஆலயத்தைச் சேர்ந்த தயாணி அவர்களும், தங்களின் நடனக் கலையை வெளிப்படுத்தினர்.
கலை நிகழ்வுவள் நிறைவு பெற்றவுடன், „எழுவோம்“ எனப் பெயரிடப்பட்ட குறுவெட்டு வெளியிடப்பட்டது. இந்த குறுவெட்டு, இசைப்பிரியனினால் இசையமைக்கப்பட்டு, கலைப்பரிதி மற்றும் கலைமகள் அவர்களாலும் பாடல் வரிகள் எழுதப்பட்டதும், குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிகளுக்கு, தமிழீழத்துப் பாடகர்களான; சந்திரமோகன், வசீகரன் மற்றும் புலத்தில் பிறந்த கலைஞர்களான; வைஷ்ணவி, மிருதுளா, அஜித்தா மற்றும் விபுர்ணன் ஆகியோர் பாடினர். இவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்ட பின், இவ் வெளியீட்டு நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.
வெளியீட்டு நிகழ்வின் பொழுது கடும் மழை பொழிந்த காரணத்தினால், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு சிறு இடையூறுகள் நிகழ்ந்தன. இருப்பினும், வெளியீட்டு நிகழ்வு, அக்கினிப் பறவைகள் அமைப்பினால் முழுமையாக நிறைவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Schreib einen Kommentar