தமிழீழ அடையாள அட்டை தொடர்பான மக்கள் சந்திப்பு – அக்கினிப் பறவைகள்

17.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழத் தேசிய அடையாள அட்டை தொடர்பான மக்கள் சந்திப்பு ஒன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது.

சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதோடு வினாக்களைக் கேட்டும் தெளிவுபெற்றனர். அத்தோடு „தமிழீழ அடையாள அட்டையைப் பெற்றவர்களுக்கான முதற் சேவை 04.08.2018 அன்று, 16.00 மணியளவில் Untere Dürrmühlestrasse 2,
4704 Niederbipp எனும் இடத்தில் மேற்கொள்ளப்படும். சுவிஸ் நாட்டின் கல்வித்திட்டங்கள் தொடர்பாக அந்நிகழ்வில் விளக்கப்படுத்தப்படும்“ என்பதும் இம் மக்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.நிகழ்வின் இறுதியில் பலர் தமிழீழத்தேசிய அடையாள அட்டைக்கான பதிவையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*