இலங்கைத் தீவின் வளங்கள் தாரைவார்க்கப்படுகின்றன…

07.1.2017 அன்று ஹம்பாந்தோட்டையில் சிங்கள மக்களுக்கு இடையில் வன்சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் அந்த சம்பவத்திற்குக் காரணமான ஒரு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த நிகழ்வின் பின்னணியினையும் மற்றும் இதனால் ஏற்படப்போகும் பாரிய ஆபத்துக்களையும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.(1)(2)

அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டட வேலைகள் 2008ம் ஆண்டில் தை மாதத்தில் தொடங்கப்பட்டது. அந்தக் கட்டட வேலைகளின் முதலாவது பகுதியின் செல்வுத்தொகை 361Mio. US-Dollarகள் ஆகும். அதன் 85% செலவுத்தொகை சீனா நாட்டின் EXIM எனும் ஒரு வங்கியிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டது.  அந்தக் கடனையும் மற்றும் அதனின் வட்டியினையும் திருப்பிக்கொடுக்க முடியாமல் இருப்பதால், அந்தத் துறைமுகத்தின் 80% பங்கினையும்(Share) மற்றும் அந்தத் துறைமுகத்தினைச் சுற்றி உள்ள 15’000 ஏக்கர் நிலப்பரப்பினையும் 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு சீனா நாட்டின் ஒரு நிறுவனத்துக்குக் விடவுள்ளது. அதனாலே சிங்கள மக்களால் அதற்கு எதிராகச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள மக்களுக்கு இடையில் வனசம்பவங்கள் நிகழ்ந்தன.(2)(3)(4)

அதேபோல அண்மையில் இலங்கை இனவழிப்பு அரசின் நிதி அமைச்சரும் மற்றும் Coca Cola நிறுவனத்தின் ஒரு முக்கியஸ்தருக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது Coca Cola நிறுவனம் இலங்கையை இந்தியாவுக்கான ஒரு வழங்கல் மையமாக உபயோகிக்க ஆர்வம் கொண்டுள்ளது. அத்துடன் அந்தச் சந்திப்பில் இலங்கைத் தீவின் நீர்வளம் பற்றியும் தேயிலை வளம் பற்றியும் இரு தரப்புக்கும் இடையில் பேசப்பட்டது. இந்த நீர்வளம் மீது Coca Cola நிறுவனம் ஆர்வமாக இருப்பது ஒரு பாரிய ஆபத்தான விடயமாகும். ஏனெனில் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், உட்டார் பிரதேஷ், கேரளா போன்ற கிடங்கில் Coca Cola நிறுவனங்களினால் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்பட்டு மற்றும் நீர்வளங்கள் அசுத்தப்படுத்தப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாரிய சேதங்களை விளைவிக்கப்பட்டது.(5)(6)

இலங்கை இனவழிப்பு அரசு இலங்கைத் தீவின் வளங்களை தாரைவார்க்கப்படுவதை முன்னெடுப்பது ஒத்துமொத்த இலங்கைத்தீவை வெளிநாட்டு அதிகாரவர்கத்திற்குத் தாரைவாரத்துக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இச்சூழலை தமிழர்கள் நன்றாக புரிந்து கொண்டு, தங்களின் மரபுவழித் தாயகமான தமிழீழத்தைச் சிதைக்க நினைக்கும் நடவடிக்கைகளான சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தும் நடவடிக்கையையும் மற்றும் தமிழர்களின் தாயகத்துக்கான இறைமையை ஏற்காத எந்தவொரு அரசியல் யாப்பினையும் ஏற்கமறுக்கும் நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

(1) http://slbc.lk/…/3026-the-agreements-pertaining-to-the-hamb…
(2) http://www.forbes.com/…/violent-protests-against-chinese-…/…
(3) http://thediplomat.com/…/china-sri-lankan-set-to-finalize-…/
(4) http://www.hirunews.lk/…/framework-agreement-signed-chinese…
(5) http://slbc.lk/…/3172-coca-cola-is-ready-to-develop-sri-lan…
(6) https://www.theguardian.com/money/2006/mar/…/business.india1

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*