இலங்கையின் இனவழிப்பு அரசு கையாளும் உத்தி

„Winning heart and minds“ என்பதன் பொருள் ஒருவரின் மனதையும் மற்றும் இதயத்தையும் வெல்லுதலாகும். யுத்தம் நடைபெறும்பொழுது அல்லது ஒரு கிளர்ச்சியை எதிர்நோக்கும் பொது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் ஆதரவாளர்களுக்கு உதவிகளை வழங்கி, அவர்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையை இந்தத் வார்த்தைப்பிரயோகம் குறிப்பிடுகிறது. „Winning heart and minds“ எனும் இந்த தந்திரோபாய உத்தி பிரித்தானியாவினால் மலேசியாவிலும் மற்றும் அமெரிக்காவினால் வியட்னாம் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்தத் திசைதிருப்பும் நடவடிக்கை இப்பொழுது இலங்கையின் இனவழிப்புப் படையினரால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் தங்களின் இறைமையை இழந்து 8 வருடங்கள் நிறைவடையவுள்ளது. அதேவேளை அண்மைக்காலங்களில் தமிழீழத்திலுள்ள எங்களின் உறவுகள் தங்களின் உரிமைகளைப் பெறுவதற்கு பல போராட்டங்களை மேற்கொள்கின்றனர். குறிப்பாக கேப்பாபுலவிலும் மற்றும் புதுக்குடியிருப்பிலும் தற்போது வரைக்கும் தங்களின் காணிகளை விடுவிக்கக்கோரி எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அவர்களுக்கு தமிழர்களில் உள்ள பல தரப்பினரிடமிருந்து ஆதரவுகள் கிடைக்கின்றன. அதனை எதிர்கொள்ளவதற்கும் மற்றும் முறியடிப்பதற்கும் இலங்கை இனவழிப்பு அரசு இந்த „Winning heart and minds“ உத்தியினை உபயோகிக்கின்றது.

கடந்த செவ்வாய்கிழமை(14.02.17) அன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள் பெருமையுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களின் இராணுவத்தினர் சமூகத்துக்காகச் செய்துள்ள நல்ல காரியங்களைப் பிரசுரித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (09.02.17) அன்று நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவன்று சில கோவில்களுக்கும் மற்றும்“Roseiro Church“ ல் நடைபெற்ற வழிபாட்டிற்கும் போக்குவரத்து, குடிநீர் மற்றும் முதலுதவி சிகிச்சைப் போன்ற உதவிகளை அளித்துள்ளனர். அத்துடன் புதுக்குடியிருப்பு மருதுவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கட்டில்கள் மற்றும் தலையணைகள் வழங்கியுள்ளனர்.

இலங்கையின் இனவழிப்புப் படையினர் மேற்கொள்ளும் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பிலிருந்து ஒரு தொகுதி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கோடும், ஈழத்தமிழர்களைப் பிரித்தாளும் நோக்கோடும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஆக்கிரமிப்புக்குள் வாழும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் அத்துடன் நான்காம் கட்ட ஈழப்போரில் இதே இனவழிப்பு இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையைத் திட்டமிட்டுத் தங்கியிருந்தனர் என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் ஒரு விடயத்தைக் கவனத்திற் கொள்ளுதல் நன்று. அதாவது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் தூரநோக்குக் கொண்ட உதவித்திட்டங்களை நாம் மேற்கொள்ளும் பட்சத்தில், இலங்கையின் „Winning heart and minds“ உத்தியினை முறியடிக்க முடியும் என்பதாகும்.

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*