21.04.19 அன்று இலங்கைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 253 பேர் (இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பு; 25.04.19) கொல்லப்பட்டனர். நன்கு திட்டமிடப்பட்ட இத்தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் நோக்குடனும் மற்றும் அதிக கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பைத் தவிர்த்து, குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய ஏனைய பிரதேசங்கள் தமிழீழ எல்லைக்கு அப்பால் அமைந்திருந்த போதிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களே இலக்குகளாக அமைந்துள்ளன. இதனால் இச் சம்பவத்தை எமது விடுதலைப் போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாக வேண்டும்.
இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களாக அமைகிற போதிலும், இவர்களை „சுபி“ முஸ்லிம்களுடன் ஒருமைப்படுத்த முடியாது. தமிழடையாளத்தை ஏற்றுக்கொண்ட இச் „சுபி“முஸ்லிம்களே சூத்திரதாரிகளின் எண்ணக் கருத்தினை ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்களின் தாக்குதல்களுக்கு இலக்காவதுண்டு.
2009ம் ஆண்டிற்குப் பின் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளினால் முஸ்லீம் மதத்தவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக சீற்றமடையும் நபர்கள், குறிப்பாக பாகிஸ்தானின் வெளியக உளவுத்துறையான „ISI“ யின் வலைக்குள் வீழ்வதுண்டு. இவர்களை வைத்து „ISI“ தனது காய்களை நகர்த்துகிறது.
ISI (Inter – Services – Intelligence)
1947ம் ஆண்டு இந்திய-பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது, பாக்கிஸ்தான் நாட்டின் இராணுவப் புலனாய்வு தனது பணிகளைச் சரியான முறையில் மேற்றுக்கொள்ளாததால், 1948ம் ஆண்டு „ISI“ உருவாக்கம் பெற்றது. ஆரம்பத்தில் பெரும்பாலும் உள்ளக புலனாய்வுத்துறை சார்ந்த வேலைகளை மேற்கொண்ட „ISI“ 80களில் பெரும் வளர்ச்சி அடைந்தது. பாக்கிஸ்தானின் அயல் நாடான ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த சோவியத் படையினருக்கு எதிராகப் போராடிய „Mujahideen“க்கு „CIA“ உளவுத்துறையானது „ISI“ ஊடாக ஆயுதங்களை வழங்கியது. இச் சூழ்நிலையினை நன்கு பயன்படுத்திய „ISI“ ஆப்கானிஸ்தானில் தனது ஆளுகையினைச் செலுத்தியது. „Mujahideen“ ளிலிருந்தே பின்பு „Taliban“ மற்றும் „Al-Quaeda“ அமைப்புக்கள் உருவாகின என்பது குறிப்பிடத்தக்கது. (1)
„ISI“ இலங்கைத் தீவில் முஸ்லீம் தரப்புகளை இயக்குவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் சில முஸ்லீம் தரப்புகள் இலங்கையின் இராணுவப் புலனாய்வினால் இயக்கப்பட்டு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (2)
2004ம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் பிரகாரம் „ISI“யினால் இயக்கப்படும் „Lashkar-e-Taiba“வும் அதனின் உதவி நிறுவனமான „Idara-Khidmat-E-Khalq“கும் தென் தமிழீழத்துக்குள் ஊடுருவியிருந்தனர் என்பது தெரியவந்தது. இதன் பிற்பாடு, காஷ்மீரில் இயங்கிவரும் „Lashkar-e-Taiba“வின் பயிற்சி முகாம்களில் அப்பகுதிகளிலிருந்த பல இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். (3)
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக இலங்கைத்தீவைப் பயன்படுத்துவதே „ISI“யின் நோக்கமாகும். இதற்கான ஒரு சிறந்த உதாரணமாக 09.09.14 அன்று சென்னையில் „அருண் செல்வராசா“ என்னும் ஒரு நபர் கைதுசெய்யப்பட்டார். இவர் ஈழத்தமிழர் என்று ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டதோடு, இவர் தனது நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் அமைந்திருந்த பல இந்திய இராணுவ தளங்களில் ஊடுருவித் தகவல்களைச் சேகரித்துள்ளார். அதே ஆண்டு இவரின் காதுக்கு முன்பே „ISI“க்கு வேலை புரிகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு இலங்கையைச் சேர்ந்த 2 முஸ்லீம் மதத்தவர்கள் இந்தியாவிற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (4) (5)
இந்திய பசுபிக் சமுத்திரங்களில் முறுகல் நிலை
சீனாவின் ஆளுகையைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இந் நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்துச் செல்கிறது. „Taiwan“ மற்றும் „Japan“ நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீன நாட்டின் போர்விமானங்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் நடந்துகொண்டிருந்தன.(6)
அதே காலப்பகுதியில் தென் சீனக் கடலில் „Philippines“ நாட்டினால் உரிமை கோரப்படும் தீவுகளின் அருகாமையில் 200 சீனக் கப்பல்கள் சென்றுள்ளமையும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது வானூர்தித் தாங்கிக் கப்பலான „Wasp“பினை „Philippines“ நாட்டுடனான கூட்டுப்பயிற்சிக்கு அனுப்பியமையும் முறுகல் நிலையினை மேலும் அதிகரித்துள்ளது. (7)
இச்சூழ்நிலையில் 18.04.19 அன்று சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட „Hambantotta“ துறைமுகத்துக்கு 2 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வந்தடைந்தன. அதிலும் இவ்விரு கப்பல்களும் இலங்கைக் கடற்படையுடனான „CARAT“ கூட்டுப்பயிற்சிக்காக வந்துள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது. (8)
அதனால் அமெரிக்காவின் போர்க்கப்பல்களுக்கு „Hambantotta“ துறைமுகத்தை உபயோகிக்க அனுமதி வழங்கிய இலங்கைக்கும், பாக்கிஸ்தானூடாக சீனா இத்தாக்குதல்கள் மூலம் ஒரு செய்தியினைச் சொல்லியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இக்குண்டுத்தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் „Interpol“, „FBI“, „Scotland Yard“ போன்ற கட்டமைபுகளின் வருகையும், இக் கேள்விக்கு வலுவூட்டுகிறது. (9)
தமிழர்களின் கடமை
சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் போர்க்களமாக மாறிவரும் அபாயத்துக்குள் இலங்கைத்தீவு உள்ளது. இது இவ்வாறு அமையும் பட்சத்தில், தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதனை இக்குண்டுத்தாக்குதல்கள் உணர்த்துகின்றன. அத்துடன் இக்குண்டுத் தாக்குதலுடன் இலங்கைத் தீவில் வன்முறை ஓயப் போவதில்லை என்பதினை ஊகிக்கக்கூடியவாறு உள்ளது. இவ் வேளையில் ஈழத்தமிழர்களாகிய நாம் அனைவரும், இதற்குள் சிக்குண்டு எமது விடுதலைப் போராட்டத்தையும் மற்றும் எமது மக்களின் பாதுகாப்பினையும் அடகு வைக்க முடியாது. இவ்விடயத்தினை இந்தியாவின் ஆளுகைக்குள் செல்லும் தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மதம் என்னும் பேதத்தினைக் கடந்து, நாம் அனைவரும் தமிழ்த் தேசிய உணர்வினை வலுப்படுத்த வேண்டும். இதனூடாக நாம் பலமடைந்து, இச்சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலினைக் கடந்து, தமிழிறைமையை நிலைநாட்ட முடியும்.
எம்மை அழிக்கும் எண்ணத்துடன் இலங்கைத் தீவைச் சர்வதேச நாடுகளுக்கு அடகு வைத்த சிங்கள மக்கள் அதன் பின்விளைவுகளை எதிர்கொண்டு, தங்களின் எதிர்காலத்தினைத் தீர்மானித்துக்கொள்ளட்டும்.
வெல்வது உறுதி
நிதர்சன்
புரட்சி Media
அக்கினிப் பறவைகள் அமைப்பு
(1) Demystifying the ISI – BS Pawar
(2) Partners in crime: SLAFs and Paramilitaries
(3) http://colombogazette.com/2016/10/23/pakistan-worried-over-exposure-of-isis-terror-activities-in-sri-lanka/
(4) http://www.ipcs.org/comm_select.php?articleNo=4665
(5) https://jamestown.org/program/pakistans-anti-india-spy-network-eyes-vital-defense-infrastructure-from-sri-lanka/
(6) https://edition.cnn.com/2019/04/01/asia/china-japan-taiwan-jets-intl/index.html
(7) https://www.scmp.com/news/china/diplomacy/article/3006012/beijing-tried-block-philippine-military-facilities-disputed
(8) http://defence.lk/new.asp?fname=Two_US_naval_ships_in_the_island_20190419_02
(9) https://edition.cnn.com/asia/live-news/sri-lanka-bombings-latest-day-4-intl-dle/index.html
Schreib einen Kommentar